
பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பதாக Nurul Izzah Anvar (நூருல் இஸ்ஸா அன்வார்) குறிப்பிட்டார்.
அத்தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிட மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும் அதனைக் கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்தார்.
கட்சியின் போராளியாக இருக்கும் தமது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுபடாது என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
பிகேஆரின் வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
