
வங்கிகளைத் தற் காப்பதை விடுத்து பொதுமக்களின் நலனுக்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டுமென லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் வங்கிகள் அதிக லாபம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த லாபத்தை மக்களுக்கே செலவழிக்க அரசு வலியுறுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பிருந்த 3 விழுக்காடு அடிப்படை வட்டி விகிதத்தை நோக்கி வங்கிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் வங்கிகள் கொழுத்த லாபத்தை சம்பாதிக்க முடியும்.
எனவே, அடித்தட்டு மக்களின் கடன் சுமையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென லிம் குவன எங் கேட்டுக் கொண்டார்.
