
தனது நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள சமூக ஊடக அகப் பக்கங்களை போலீசாரே அழித்ததற்கான சந்தேகம் இருப்பதால் அது பற்றி விசாரணை வேண்டுமென Metta (மேத்தா) எனும் நிறுவனம் போலீசில் புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகி இருப்பதாகவும் அந்த விசாரணை பற்றி எதுவும் தெரியவில்லை என்று பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
போலிசாரின் மீதான குற்றச்சாட்டை போலீஸ் துறையே விசாரிப்பதால் நியாயம் கிடைக்காது. எனவே, தனிப்பட்ட, சுதந்திரமான, சுயேச்சை அமைப்பு அதனை விசாரிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
புக்கிட் அமான் முதலில் அக்குற்றச்சாட்டை மறுத்தாலும், பின்னர் அதன் விசாரணை தொடர்வதாகத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்டு 5ஆம் தேதி, மேத்தா நிறுவனம் தனது பராமரிப்பில் இருந்த 595 முகநூல் கணக்குகள் 100 பக்கங்கள், 11 குழுக்கள், 72 இன்ஸ்டாக்ராம் அகப்பக்கங்கள் ஆகியவை அழிக்கப்பட்டதில், போலீசாரின் பங்கு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
