34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

அம்னோ தனியாகப் போட்டியிட்டால் படுதோல்வி அடையும்

வரும் பொதுத்தேர்தலில் அம்னோ மற்ற மலாய்க் காரர்கள் சார்ந்த கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடாவிட்டால், அது படுதோல்வி அடையும் என்று பாஸ் கட்சி எச்சரித்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் அது தோல்வியுற்று அதிகாரத்தைப் பறிகொடுத்ததற்கு இதுதான் காரணம் என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் Idris Ahmad (இட்ரிஸ் அமாட்) தெரிவித்தார்.
அம்னோ, பெர்சத்து, பாஸ் ஆகியவை கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாஸ் கட்சி எப்படியாவது அம்னோவையும் பெர்சத்துவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்டு ஆதாயம் தேட நினைக்கையில், அதோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலையில் அம்னோ விடாப்பிடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles