
பருவ மழைக் காலத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது பிரச்சினையே இல்லையென்று அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக நாட்டில் பருவ மழைக்காலம் செப்டம்பரில் தொடங்கி ஆண்டு இறுதியில் முடிவடையும் என்பதால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
1999ஆம் ஆண்டு துன் மகாதீர் நவம்பர் 10ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்தினார். அப்போது அது பிரச்சினையாக எழுப்பப்படவில்லை.
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்தபோது அவர்களின் வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்ய முடியாது போனதால், தேர்தலில் தோற்று விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இவ்வாண்டில் தேர்தலை நடத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
