24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த முடியாவிட்டால்
தேர்தலை நடத்தலாம்

🔥 Views : 7
👁 Reading Now : 20

நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த தற்போதைய அரசினால் முடியாவிட்டால், பொதுத்தேர்தலை நடத்தலாம் என பெர்சத்துவின் தலைவர் முஹிடின் யாசின் பரிந்துரைத்தார்.
ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி, உயர்ந்து வரும் பண வீக்கம், நடப்புப் பொருளாதார சூழ்நிலை, ஆகியவை சாமானிய மலேசியசியர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
அதே சமயத்தில் பி40 பிரிவைச் சேர்ந்த, வருமானம் குறைந்த குடும்பங்கள் இப்போது பி60 பிரிவில் கீழிறங்கியுள்ளனர் என்று முஹிடின் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பிரச்சினைகளைக் களைய மீட்சிக் குழுவின் தலைவர் என்ற முறையில் பல பரிந்துரைகளை முன் வைத்ததாகவும் ஆனால், அவை அமலுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ரிங்கிட்டின் மதிப்பு சரிந்து வருவதை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்பதால், இந்தப் பிரச்சினைகளைக் களைய புதியதொரு அரசாங்கம் பதவியேற்று, தீர்க்குமானால் பொதுத்தேர்தலை நடத்துவதே முறையாகும் என்று முஹிடின் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles