24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

மலாய்க்காரர்களின் அரசு தோல்வி கண்ட அரசா?

மலாய்க்காரர் அரசாங்கத்தில் மலாய்க்காரர் அல்லாதவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியதை அடுத்து முன்னாள்சட்டத்துறைத் தலைவர் Tommy Thomas (டோமி தோமஸ்)கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.
அது பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர் மன்றத் தலைவர் Raduan Che Rose (ராடுவான் சே ரோஸ்), டோமி தோமஸ் பொறுப்பின்றி அவ்வாறு கூறுவதாகவும் அவரின் கருத்து நிந்தனைக்குரியது என்றும் தெரிவித்தார்.
நடப்பு அரசாங்கத்தில் மசீசவும் மஇகாவும் இருப்பதால் மலாய்க்காரர் அல்லாதோர் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது மிகவும் தவறு என்று அவர் தெரிவித்தார்.
மலாய்க்கார அரசாங்கம் டுக்கு நன்மையைக் கொண்டு வரவில்லை என்றும் மகாதீர் அரசாங்கத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மை இல்லாததால்தான் அது கவிழ்க்கப்பட்டதாக டோமி தோமஸ் கூறியிருந்தார்.
இஸ்மாயில் சப்ரி அரசாங்கம் பொருளாதாரத்தைச் சீர்படுத்தியதால் அதன் வளர்ச்சி 8.9 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகவும் ராடுவான் தெரிவித்தார்,

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles