25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

எத்தகைய மலாய்க்காரர்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்?

இனம், சமயம் சார்ந்த கொள்கை இயற்றும் விவகாரத்தில் மலாய்க்காரர்கள் மட்டும்தான் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர் என மலாய்க்காரர்கள் அல்லாதோர் கருதி வருவதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸாய்ட் இப்ராஹிம் தெரிவித்தார்.
புதிய பொருளாதாரக் கொள்கையை இனப் பாகுபாட்டோடு பார்க்கக்கூடாது. இன ரீதியான ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்யவே அது அமைக்கப்பட்டதாக ஸாய்ட் குறிப்பிட்டார்.
சிறு, நடுத்தரத் தொழில்துறைகளில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அதில் மலாய்க்காரர்கள் குறைவாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் மலாய்க்காரர்களின் ஆதிக்கம் இருந்தால் நாட்டில் வளர்ச்சி பாதிப்படையும் என்று கூறியிருக்கும் டோமி தோமஸில் கூற்றை ஜசெக ஏற்றுக் கொள்கிறதா என ஸாய்ட் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles