24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சீனர், இந்தியர்களுக்கு குறைந்த ஒதுக்கீடு ஏன்?

🔥 Views : 7
👁 Reading Now : 56

2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்(பட்ஜெட்) மலாய்க்காரர்களுக்கு ரிம. 1,140 கோடி, பூர்வகுடிகளுக்கு ரிம. 27.4 கோடி, சீன, இந்திய சமூகங்களுக்கு 34.5 கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டதாக ஜசெக தலைவர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பினார்.
மலாய்க்காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றி தாம் கேள்வி எழுப்பவில்லை என்றும் மாறாக பூர்வகுடி இனத்தவர்களைக் காட்டிலும் சீன, இந்திய இரு சமூகங்களுக்கும் சேர்த்து 34.5 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது பாகுபாடு என அவர் சாடினார்.
மலாய்க்காரர்களுக்கும் பூர்வகுடி இன மக்களுக்கும் ஒதுக்கப்ட்ட நிதியில் இருந்து வெறும் 3 விழுக்காடு மட்டுமே சீன, இந்தியர்களுக்கு என்பது அந்த இரு சமூகங்களுக்கும் அரசு காட்டும் மரியாதை என்றும் அவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய சேவை, அர்ப்பணிப்பு உணர்வுக்குக் கட்டும் பிரதிவுபகாரம் என்றும் லிம் குவான் எங் வர்ணித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles