
நாட்டில் ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அரசு இலாக்காக்கள், பொதுத்துறை நிறூவனங்கள்(ஜிஎல்சி), அரசாங்கத்தோடு இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (ஜிஎல்ஐசி) ஆகியவற்றின் தலைவர்கள், நீதித் துறையில் இருப்போர் தங்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டுமென பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.
அரசாங்கத்தின் நம்பகத் தன்மை, நேர்மையை உயர்த்துவதற்காக அரசாங்க நிர்வாக உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்களுக்கான சொத்துப் பிரகடனம் நடைமுறையும் மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாவட்டங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் கவுன்சிலர்கள் ஊழல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களை இடம் மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்
