25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

வேலை மோசடி தொடர்பில் பிரதமரிடம் மகஜர்

கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய ஆபத்து நிறைந்த நாடுகளுக்குச் செல்லும் 40 வயதுக்குட்பட்ட வேலை தேடுவோருக்கு விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டுமென அனைத்துலக மனிதாபிமான அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமரிடம் வழங்கிய மகஜரில் அரசாங்கம், வெளியுறவு அமைச்சு, சம்பந்தப்பட்ட அரசாங்கம் ஆகியவற்றின் உடன்பாட்டுடன் அவர்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென அதன் செயலாளர் ஹிஷாமுடின் ஹாசிம், கடந்த மாதம் 239 மலேசியர்கள் வேலை மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு, பாதிப்பிற்கு உள்ளாதானதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
எனவே, இதில் அரசு தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென அந்த இயக்கம் கேட்டுக் கொண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles