
நேற்று முன்தினம் உலு பெசுட்டில் நேர்ந்த சூறாவளிக் காற்றில் 60 வீடுகள் சேதமடைந்ததாக உலு பெசுட் சட்டமன்ற உறுப்பினர் மாட் டாய்க் முகமட் தெரிவித்தார்.
மாலை 5 மணியளவில் கடும் மழைக்கிடையே ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் பல கிராமங்களில் இருந்த வீடுகள் சேதமடைந்ததாகவும் பெரும்பாலான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இது கடுமையாக இருந்ததாகவும், இவ்வாண்டில் நடந்த இரண்டாவது சம்பவம் இது என்றும் தெரிவித்தார்.
