
முன்னாள் புலனாய்வு இயக்குநர் அமார் சிங், ஓய்வு பெற்ற இரு துணை இயக்குநர்கள் ஆகியோர் இணையதள எழுத்தாளர் ராஜா பெத்ரா கமாருடின் மீது செய்துள்ள புகார் மீது விசாரணை தொடர்வதாக கோலாலம்பூர் துணைப் போலீஸ் தலைவர் யஹாயா ஓஸ்மான் தெரிவித்தார்.
2029 மே மாதம் அவர்கள் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டில் சோதனை செய்தபோது, அமார் சிங்கின் காதலி அங்கு கைபற்றப்பட்ட கைப் பை ஒன்றை எடுத்துச் சென்றதாக ராஜா பெத்ரா தமது இணைய பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்.
அது பற்றிக் குறிப்பிட்ட அமார் சிங், சோதனை நடவடிக்கையின்போது பொதுமக்கள யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் அங்கு மேற்கொள்ளப் பட்ட சோதனை நடவடிக்கைகள் யாவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
