
அனைத்துலக வெளிப்படையான அமைப்பின் புள்ளி விவரத்தில், ஊழலில் மலேசியா 62ஆவது இடத்திலிருந்து 57ஆவது இடத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகப் பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தப் புள்ளிவிவரத்தை நாம் நேர்மையாகவும் உளப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது சமூகத்தில் ஏற்படும் புற்றுநோய் என்றும் சமச்சீரற்ற மேம்பாடு, சூற்றுச்சூழல் தூய்மைக் கேடு, சமச்சீரற்ற செல்வ விநியோகம், தேசிய வளங்களில் ஏற்படும் விரயத்துக்கு இட்டுச் செல்லும் என்று அவர் எச்சரித்தார்.
இதனை ஒரு சாதாரண விஷயமாகவும் மெத்தனமாகவும் எடுத்துக் கொள்ளவும் நியாயப்படுத்தவும் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எம்ஏசிசிக்கு அனுப்பப்படும் புகார்கள், அனாமதேய கடிதங்கள், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஊழல் தகவல்கள் யாவும் நாட்டில் ஊழல் கலாச்சாரம் வேர் விட்டுப் பரவியுள்ளதைப் புலப்படுத்துவதாக சுல்தான் நஸ்ரின் தெரிவித்தார்.
