
நஜிப் ரசாக் உடல்நலம் குறித்து பொய்யான காரணம் காட்டி மருத்துவமனையில் இருப்பதாக ஊடகப் செய்தி பரவியதை அடுத்து, அது சம்பந்தமாக Sungai Rappat (சுங்கை ராப்பாட்) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Hamidah Osman (ஹமிடா ஓஸ்மான்) போலீசில் புகார் அளித்துள்ளார்.
தமது புகாருடன் நஜிப்பின் மருத்துவக் குறிப்பையும் ஹமிடா இணைத்துள்ளார். தமக்கு அனுப்பப்பட்ட ஊடகச் செய்தியில், நஜிப் வேண்டுமென்றே தமக்கு நோய் இருப்பதாக நாடகமாடுவதாகக் குறிக்கப்பட்டிருப்பதாக ஹிமிடா தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, நஜிப்பின் ரத்த அழுத்தம் உயர்ந்ததால், அவருக்கு சிகிச்சை அளிக்கும்படி நிதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தற்போது செராஸ் மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
