
அரசாங்கப் பதிவு பெற்ற சமூக அமைப்புகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக 5 நாள் விடுமுறை அளிக்கப்படுவதாகப் பொதுச் சேவைத் துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களின் இறப்புக்கு 3 நாள், பிரசவ விடுமுறையாக 90 நாள், மனைவியின் பிரசவத்திற்கு கணவருக்கு 7 நாள், ஆசிரியர்களுக்குச் சிறப்பு விடுமுறையாக 15 நாள் ஆகிய விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.
சமூக சேவையில் ஈடுபடும் ஊழியர் நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டால், முழு விடுமுறையும், அதை விட குறைவான நேரத்தில் ஈடுபட்டால், அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே விடுப்பும் அளிக்கப்படும்.
