27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

கொலை வழக்கின் முக்கிய சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல்

🔥 Views : 6
👁 Reading Now : 39

5 ஆண்டுகளுக்கு முன்னர் 5 நபர்களால் கொலை செய்யப்பட்ட டி. நவீன் வழக்கில் முக்கிய சாட்சிகளான டி.பிரவிலின் (23), சமூக ஆர்வலர் அருண் துரைசாமி ஆகியோருக்கு கொலையில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
செப்டம்பர் 14ஆம் தேதி அன்றைய விசாரணை முடிந்து, நீதிமன்ற வளாகத்தில் சென்ற டி.பிரவிலினைப் பார்த்த கொலையாளி, தாம் சிறையிலிருந்து மீண்ட பின்னர் அவரைத் தேடி வந்து கொலை செய்யப் போவதாக எச்சரித்துள்ளான். பின்னர் அருண் துரைசாமியையும் பார்த்து அதே போன்ற அச்சுறுத்தலை விடுத்துள்ளான்.
இது சம்பந்தமாகக் குறிப்பிட்ட வட கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் Sofian san Tong (சோஃபியான் சன் தோங், விசாரணை தொடர்வதாகத் தெரிவித்தார்.
நவீனை கொலை செய்த வழக்கில் எஸ்.கோபிநாத்(30), ஜே.ராஜசுதன்(22), எஸ்.கோகுலன் (22), இரு இளம் வயதினர் மீதான வழக்கு தற்போது நடந்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles