26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சிறையில் இருக்கும் நஜிப்பிற்கு ரிம. 3.5 மில்லியன் செலவா?

🔥 Views : 5
👁 Reading Now : 46

ஊழலுக்காக 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜிப் ரசாக்கிற்கு தங்குமிட வீட்டை சீரமைக்கவும் இன்னும் இதர செலவுகளுக்காகவும் 3.5 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி கூறுகிறது. இது சம்பந்தமாக உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டுமென ஜசெக மத்திய செயலவை உறுப்பினர் Shahredzan Johan (ஷாரெட்ஸான் ஜோஹான்) வலியுறுத்தியுள்ளார்.
காஜாங் சிறையில் இருக்கும் நஜிப்பின் அறையைப் புதுப்பிக்க ரிம. 50,000 செலவிடப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கைதிகளை நடத்துவதில் பாகுபாடு காட்டப்படுவது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
விஐபி கைதிகளுக்கு மற்ற கைதிகளை விட சிறப்புச் சலுகை காட்டுவது சட்டவிரோதம் என்றும் ஷாரெட்ஸான் குறிப்பிட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles