
தலைநகரில் சோகோ பேரங்காடிக்கு அருகில் Muda (மூடா) கட்சியின் தேர்தலுக்கு எதிரான அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
அதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய மூடாவின் தலைவர் Said Sadiq Said Abdul Rahman (சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான்), பருவமழைக் காலத்தில் தேர்தலை நடத்துவது ஆபத்தை விலைக்கு வாங்குவது போன்றது என்றும் கடந்தாண்டு ஷா ஆலமில் நடந்த கடும் வெள்ளத்தை அரசியல்வாதிகள் மறந்து விடக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டார்.
