
வரும் பொதுத்தேர்தலில் வாரிசான் தேசிய முன்னணியையும் காபுங்கான் ராக்யாட் சபாவையும் எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.
ஜிஆர்எஸ் கட்சியானது தேசிய முன்னணியில் முன்பு இருந்தவர்கள் அடங்கியது என்றும் தேசிய முன்னணியானது பதவிக்கும் பட்டத்துக்கும் அலையும் அரசியல்வாதிகளைக் கொண்ட கட்சி என்றும் அவர் விமர்சித்தார்.
வாரிசானை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாமென்றும் கடந்த தேர்தலில் தேசிய முன்னணியை மண்ணைக் கவ்வ வைத்தது இதே வாரிசான்தான் என அவர் குறிப்பட்டார்.
