
பக்காத்தான் கூட்டணியில் Big Brorther (‘பிக் பிரதர்’) என்று சொல்லக் கூடிய பெரியதனம் கொண்டவர்கள் யாருமில்லை என்றும் அதில் எல்லா கட்சிகளுமே சமமான உரிமையைக் கொண்டிருப்பதாக கிள்ளான் எம்பி Charles Santhiago (சார்ல்ஸ் சந்தியாகோ) தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 15ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், ஜசெகதான் அதில் ஆட்சி செய்யும் என்றும் ஜசெக அனுமதித்தால் மட்டுமே அன்வார் இப்ராஹிம் பிரதமராக முடியும் என்றும் மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் குறிப்பிட்டிருந்தார்.
அது பற்றிப் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறும்போது, தாப்பாவில் தோற்று விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக சரவணன் பிதற்றுவதாகவும் மனிதவள அமைச்சராக இருக்கும் சரவணனின் எதிர்மறையான நடவடிக்கையினால் நாட்டில் போதுமான வேலையாட்கள் இல்லாமையால் ஆயிரக் கணக்கான தொழில்கள் மூடுவிழா கண்டிருப்பதாக ராமசாமி சுட்டிக் காட்டினார்.
