
எஸ்ஆர்சி வழக்கில் தற்போது சிறையில் இருக்கும் நஜிப் ரசாக் நடத்தப்பட்ட விதத்தையும் தாம் சிறையில் இருந்தபோது நடத்தப்பட்ட விதத்தையும் ஒப்பிட வேண்டாமென அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
தாம் இரண்டு முறை தலா 5 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, சிமெண்டு தரையில் படுத்துறங்கியதாகவும், மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில்தான் தமக்கு ஒரு கட்டில் தரப்பட்டதாக அவர் தெரிவித்தார். அங்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னரே செராஸில் உள்ள Physiotherapi (பிஸியோதெராப்பி) சிகிச்சைக்கு அனுப்பபப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், நஜிப் ரசாக் சிறையில் இருந்த ஒரே வாரத்தில் உயர் ரத்தம் அழுத்தம் என்ற காரணம் காட்டி, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அதன் பின்னர் பிரதமரின் உத்தரவின் பேரில் செராஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தற்போது அது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதிலிருந்து தாம் நடத்தப்பட்ட விதத்தை மக்கள் அறிந்து கொள்ளலாம் என்று அன்வார் குறிப்பிட்டார்.
