
Penjana Kerja (பெஞ்சானா கெர்ஜா) வேலை வாய்ப்புத் திட்டத்தில் 10 கோடி ரிங்கிட் மோசடி நடந்துள்ளதாகக் கூறி ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 45 பேரைக் கைது செய்தது.
அந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது என்று எம்ஏசிசி அறிவிக்காத நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் என்னவானார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும்.
மனிதவள அமைச்சர் எம்.சரவணன் கூட அதில் மஇகா தலைவர்கள் சம்பந்தப் பட்டிருக்கலாம் எனறு ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே, வழக்கின் நிலையை எம்ஏச்சி பொதுமக்களுக்கு விளக்க வேண்டுமெ பிகே ஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Kamil Munim (காமில் முனிம்) வலியுறுத்தியுள்ளார்.
