
நல்ல வேலை, நல்ல சம்பளம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்ட்ட நூற்றுக் கணக்கான மலேசியர்கள் கம்போடியா, லாவோஸ், வியாட்நாம் போன்ற நாடுகளில் சிக்கி சட்டவிரோத காரியங்களில் ஈடுபட வைக்கப்படுவதாக பல கதைகள் சொல்லப் படுகிறது.
நேற்று Metro Harian (மெட்ரோ ஹரியான்) வெளியிட்ட செய்தியில், வேலை தேடி கம்போடியாவுக்குச் சென்ற மலேசிய முஸ்லிம் பெண்ணொருவர் பலரோடு படுக்க வைக்கப்பட்டதாகவும், பன்றி இறைச்சியை உண்ண வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட் டுள்ளது.
கொடுக்கின்ற வேலையைச் செய்ய முடியாவிட்டால், வேறொரு கும்பலுக்கு விற்கப்பட்டு விபச்சாரத் தொழிலில் ஈடுபட வைக்கப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவலை அது தெரிவித்துள்ளது.
