
15ஆவது பொதுத்தேர்தலை இவ்வாண்டுக்குள்ளே நடத்த வேண்டுமென நெருக்குதல் கொடுக்கும் அமாட் ஸாஹிட் ஹமிடியிடம் பிரதமர் அச்சப்படத் தேவையில்லை என்று ஜசெக செயலாளர் Anthony Loke (அந்தோணி லோக்) தெரிவித்தார்.
ஸாஹிட் நெருக்குதல் கொடுத்தால், பாக்காத்தான் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு பக்காத்தான் பக்கபலமாக இருக்கும் என்று அவர் உறுதி கூறினார்.
இன்றைக்கு நீங்களே பிரதமர். கட்சியின் எடுபிடி இல்லை. பிரதமர் கடமையை நிறைவேற்றுங்கள். அதனைச் செய்வீர்களா னால், அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான நல்லிணக்க ஒப்பந்தத்தை பக்காத்தான் தொடரும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
