
தாம் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக உலவும் செய்தியில் உண்மையில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
போர்ட் டிக்ஷனில் இருந்து அம்பாங் தொகுதிக்குத் தாவப் போவதாகத் தாம் ஒருபோதும் சொல்லவில்லை என்றும் பல்லின சமூகத்தையும் உள்ளடக்கிய கூட்டணியின் தலைவரான தாம், நாட்டில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவது ஒரு பிரச்சினையே இல்லை என்றும் தெரிவித்தார்
அத்தொகுதியில் Party Bangsa Malaysia (பார்ட்டி பங்சா மலேசியா)வின் தலைவர் Zuraidah Kamarudin (ஸுரைடா கமாருடினுக்கு) ஆதரவாக அந்த தமது முன்னாள் உதவியாளர் ஹஸ்னோன் இச் செய்தியைப் பரப்பி வருகிறார் என்று அன்வார் குறிப்பிட்டார்.
