
தற்போது நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, அதற்கான தீர்மானத்தை மக்களவையில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டுமென அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தீர்மானத்தை அரசு தாக்கல் செய்யத் தவறினால், எதிர்க்கட்சி எனும் பொறுப்பில் தாமே அதனைத் தாக்கல் செய்யப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
பொருள்களின் விலையேற்றம், பணவீக்கம், ரிங்கிட்டின் மதிப்புச் சரிவு போன்றவை மக்களை வெகுவாகப் பாதித்துள்ளதால், அவற்றிற்குத் தீர்வு காண்பது அவசியமாகும் என்று அன்வார் வலியுறுத்தினார்.
