
15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், இஸ்மாயில் சப்ரியே பிரதமவராவார் என்று அம்னோவின் உதவித் தலைவர் மாட்ஸிர் காலிட் தெரிவித்தார்.
ஆக இறுதியான அம்னோவின் கூட்டத்தில், இஸ்மாயில் சப்ரி நாட்டின் 10ஆவது பிரதமராக நீடிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த முடிவின்படி அவரே பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்றும், கட்சித் தலைவர் ஸாஹிட் ஹமிடியை பிரதமராக்கும் முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
