34 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

மலேசிய சாலைகள் உலகின் சிறந்த 21 சாலைகளில்
ஒன்றாகும்

மலேசியா மிகவும் மோசமான சாலைகளைக் கொண்டதாகக் கூறப்படுவது அபத்தம் எனக் குறிப்பிட்ட போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், உலகின் சிறந்த 21 சாலைகளில் மலேசிய சாலைகள் அடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
நமது சாலைகளைப் பற்றிய தப்பான அபிப்பிராயம் உலவி வருவது தவறானது, அது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உத்துசானின் ஆய்வில், சாலையின் தரம், பாதுகாப்பு, பராமரிப்பு, சாலை விபத்துகள், சாலைகளின் நீளம் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு, மலேசிய சாலைகள் ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூ சிலாந்து சாலைகளை விட தரத்தில் உயர்ந்து உலகின் 21 மிகச் சிறந்த சாலைகளில் ஒன்றாக இருப்பதாக வீ கா சியோங் குறிப்பிட்டார்.
குளோபல் எக்கோனோமி எனும் தனியார் அமைப்பு 144 நாடுகளின் 14,000 தொழில் முனைவர்களின் கருத்துகளின் அடிப்படையில், மலேசிய சாலைகள் 7க்கு 5.3 புள்ளிகளைப் பெற்று உலகின் சிறந்த 21 சாலைகளின் ஒன்றைப்
பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
தென்கிழக்காசியாவில் சிங்கப்பூரைத் தவிர்த்து மலேசிய சாலைகள் தரத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles