
அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தமாக முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரனுக்கும் இந்நாள் அமைச்சர் எம். சரவணனுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாட்டில் அந்நியத் தொழிலாளர்களின் பற்றாக்குறைக்கு
பக்காத்தான்தான் காரணம் என்றும் அந்த ஆட்சி 2019இல் அந்நியத் தொழிலாளர் தருவிப்பை ரத்து செய்ததால் பல தொழில்கள் ஊழியர் பற்றாக்குறையினால் மூடுவிழா கண்டதாகவும் அதற்குப் பக்காத்தான் மனிதவள அமைச்சர் குலசேகரனே காரணம் என சரவணன் குற்றம் சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த குலசேகரன், சரவணன் வேண்டுமென்றே வம்பிழுப்பதாகவும் முந்தைய ஆட்சியில் அந்நியத் தொழிலாளர் தருவிப்பில் முறைகேடும், லஞ்ச லாவண்யமும் பரவலாகத் தலைவிரித்து ஆடியதால், அந்நியத் தொழிலாளர் தருவிப்பை பக்காத்தான் தற்காலிகமாக நிறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
