33.8 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

1எம்டிபி நிதியைப் பெற்றவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்:
பினாங்கு அம்னோ எம்ஏசிசியில் புகார்

1எம்டிபியின் நிதி 70 கோடி ரிங்கிட்டை 250 தனிப்பட்ட நபர்கள் பெற்றிருப்பதால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பினாங்கு அம்னோ ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளது.
பினாங்கு அம்னோ துணைத் தலைவர் Shaikh Hussein Mydin (ஷேய்க் ஹுசேய்ன் மைடின்), அது சம்பந்தமான புகாரைத் தாம் இன்று காலை 11 மணிக்கு எம்ஏசிசியிடம் சமர்ப்பிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
அந்த நிதியை சட்டவிரோதமாகப் பெற்றவர்கள் மீது இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இது நியாயமில்லை என்பதால் மக்களின் வரிப் பணத்தைக் களவாடிய அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles