
15ஆவது பொதுத்தேர்தலில் வாக்களிக்க ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுவதாக சட்டத்துறைத் தலைவர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபார் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியாவில் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும், சபா, சரவாக்கில் காலை 7.30மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையிலும் வாக்களிக்கும் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 18 வயதுடையோர் இயல்பாக வாக்காளர்களாக பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதால் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, வாக்களிப்பு மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
