
பொதுத்தேர்தலைக் கண்டு மக்களை விட எதிர்க்கட்சிகளே மிகவும் அச்சப்படுவது ஏன் என மஇ கா துணைத் தலைவர் எம்.சரவணன் கேள் வி எழுப்பினார்.
பருவகால மழை இவ்வாண்டு நவம்பர் 15ஆம் தேதிக்குப் பின்னரே நிகழும் என்பதால், பொதுத்தேர்தலை அதற்கு முன்னரே நடத்துவதால் மழையின் பாதிப்பு இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
22 மாத பக்காத்தான் ஆட்சியில் செய்த தவறுகளினால், பொதுமக்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே எதிர்க்கட்சிகள் விரைவான தேர்தலை எதிர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
