25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

சக ஊழியரைக் நோக்கமில்லா கொலை செய்த இந்திய பிரஜைக்கு 14 ஆண்டு சிறை

4 ஆண்டுகளுக்கு முன்னர் சக ஊழியரைக் கொலை செய்த குற்றத்திற்காக இந்திய பிரஜையான ராஜேந்திரனுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
2019 ஏப்ரல் 6ஆம் தேதி மாரான், சிம்பாங் கம்போங் அவாலில் பி.ராமுடுநாயுடு என்பவரை நோக்கமில்லா கொலை செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு இத்தண்டனை அளிக்கப்பட்டது.
முதலில் சுமத்தப்பட்ட கொலை வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அடுத்து அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட்டார். அதன் பின்னர், அந்த வழக்கு நோக்கமில்லா கொலையாகத் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தோட்டக் குடியிருப்பில் இருந்தபோது ராமுடுநாயுடு, ராஜேந்திரனை அநாகரிகமாக விமர்சித்து, ஆயுதத்தால் தாக்கியதால், ராஜேந்திரன் தம்மைத் தற்காக்கவே அவரைத் தாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக வழக்கறிஞர் பல்ஜிட் சிங் சிது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles