
15 நாள்களாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் சென்ற 8,000 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக புக்கிட் அமான் செயலாளர் Noorsiah Saaduddin (நூர்சியா சாடுடின்) தெரிவித்தார்.
அதில் மோட்டார் சைக்கிளோட்டிகள் 8,211 பேர், காரோட்டிகள் 6,083, மற்ற வாகன ஓட்டுநர்கள் 1,055, லோரி ஓட்டுநர்கள் 528, வேன் ஓட்டுநர்கள் 264, பேருந்து ஒட்டுநர்கள் 22 பேர் அடங்குவர்.
சிவப்பு சமிக்ஞை விளக்கை மதிக்காமல் செல்வதைப் போலீஸ் துறை கடுமையாகக் கருதுவதாகவும் அது விபத்தை ஏற்படுத்துவதால் வாகன ஓட்டிகள் விழிப்பாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
