
15ஆவது பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது, பக்காத்தான் ஹராப்பானின் கீழ் இயங்கும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான்
சட்டமன்றங்கள் கலைக்கப்படாமல், அடுத்தாண்டு கலைக்கப்பட்டு அவற்றிற்கான தேர்தல் தனியாக நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த 3 மாநில மந்திரி பெசார்கள், முதலமைச்சரோடு கலந்தாலோசித்த பின்னர் மக்களுக்குப் பெரும் சுமையைக் கொடுக்கா வண்ணம் அவற்றிற்கு அடுத்தாண்டு தனியாகத் தேர்தல் நடத்த பக்காத்தான் தலைமைத்துவ மன்றம் முடிவெடுத் துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் விரைவாக நடத்தப்பட்டால், தற்போதுள்ள பக்காத்தான் சின்னம் பயன்படுத்தப்படும் என்றும், அடுத்தாண்டு என்றால், கூட்டணியின் புதிய சின்னம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
