25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

நாடாளுமன்ற நடவடிக்கையில் கலந்து கொள்ள நஜிப் நீதிமன்றத்தில் மனு

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நஜிப் ரசாக் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற அவையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமது ஜனநாயகக் கடமையை ஆற்ற நஜிப் மக்களவை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும் அவையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி சிறைத்துறை அவருக்கு அனுமதி மறுத்த வேளையில், அவருக்கான அனுமதியை திங்கட்கிழமை பிற்பகல் 12 வரைக்குள் தெரிவிக்க வேண்டுமென்றும் தவறினால், சிறைத் துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நஜிப்பின் வழக்கறிஞர் Muhammad Shafee Abdullah (முகமட் ஷாபி அப்துல்லா) எச்சரித்திருந்தார்.
நஜிப் செராஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது, பாதுகாப்பு காரணத்தைக் குறிப்பிடாத சிறைத்துறை, மக்களவையில் கலந்து கொள்வதற்கு மட்டுமே அதனைக் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles