
பக்காத்தான் கூட்டணியில் போதுமான இளைஞர்கள் பொதுதேர்தலில் போட்டியிடவிருப்பதால், மூடாவின் கூட்டுறவு தேவையில்லை என ஜசெகவின் Young Syefura Othman (யோங் ஷெஃபுரா ஓஸ்மானும்) பிகேஆரின் Adam Adli (அடாம் ஆடிலும்) குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் மூடாவின் தலைவர் Syed Saddiq Abdul Rahman (சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான்) தமது கட்சி அதிகமான இளைஞர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கவிருப்பதை அடுத்து, பக்காத்தான் கட்சிகளும் அதனையொட்டி, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் என்று தெரிவித்ததை அடுத்து, மேற்கண்ட இருவரும் அவருக்குப் பதிலளிக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனிடையே அரசியல் விமர்சகர் Awang Azman Pawi
(அவாங் அஸ்மான் பாவி) கூறும்போது மூடா, பக்காத்தானுக்கு எவ்வகையிலும் பலனைக் கொண்டுவராது என்றும் அது வெல்லக்கூடிய தொகுதிகளுக்கு மட்டுமே போட்டியிட விருப்பதால், பக்காத்தானின் வாய்ப்பைக் குறைக்கும் என்றும் மூடாவுக்கு தேர்தல் இயந்திரம் இல்லை என்பதால், பக்காத்தானின் உதவியால் பலனை அனுபவிக்க அது திட்டமிடுவதாக அவர் தெரிவித்தார்.
