
தேசிய வகைப் பள்ளிகளில் அரபு மொழிப் பாடத்தை வலியுறுத்திச் சொல்லிக் கொடுகும்போது, அங்கு மாண்டரின், தமிழ்ப் பாடங்களையும் பள்ளி நிர்வாகங்கள் முன்னிலைப்படுத்த வேண்டுமென பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் Foong Phui Si (ஃபூங் புய் சி) கேட்டுக் கொண்டார்.
அப்பள்ளிகளில் மாண்டரின், தமிழ்ப் பாடங்களைப் பயில போதுமான மாணவர்களும் ஆசிரியர்களும் இல்லையென்ற பல்வேறு காரணங்களைக் கூறுவதை விடுத்து, அப்பாடங்களை மாணவர்கள் பயில ஊக்குவிப்புத் தர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மற்ற மொழிப் பாடங்களைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதை விடுத்து, கையில் இருக்கின்ற தாய்மமொழிப் பாடங்களை மாணவர்கள் பயில கல்வியமைச்சு ஆவண நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஃபூங் கேட்டுக் கொண்டார்.
