
15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பிகேஆர் இரு வழிமுறைகளைப் பின்பற்றும் என்றும் முதலாவது, தற்போதுள்ள தொகுதிகளின் நடப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு என்பதோடு இரண்டாவதாக, பிகேஆர் உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் தற்போது இருக்கும் மக்கள் பிரதிதிநிகளுக்கே முதல் வாய்ப்பு வழங்கப்படும். எனினும், ஜனநாயக முறையில் அதிகமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கட்சிக்கு வெளியே நிறைய தகுதியான தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் எண்ணத்தில், இணையதள அகப்பக்கம் திறக்கப்பட்டு, அவர்களும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுத்கின்றன. அவ்வகையில் விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் கிளை, தொகுதி, மாநில, மத்திய செயலவையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அந்த முறையில் வேட்பாளர்களாகத் தேர்வு பெறுவோர், மலேசிய குடிமகனாகவும், கல்வித் தகுதி கொண்டவர்களாகவும், திவாலானவராக இருக்கக் கூடாதென்றும், குற்றச் செயல் பதிவு இல்லாமலும் சரியான மன நிலையிலும் இருக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென துணைத் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
