
மலாய்க்கார வாக்காளர்களின் வாக்குகளைக் கவர ஜசெக, மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் அதிகமான மலாய் வேட்பாளர்களை நிறுத்தும் என அதன் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
கெடா, பேராக், பகாங், ஜொகூர், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் தகுதியான மலாய் வேட்பாளர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு ஏற்ற தொகுதிகள் வழங்கப்பட்டு ஜசெக அதிகமான இடங்களைப் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை என்பதால் மலாய் வேட்பாளர்களுக்குத் தொகுதிகள் எத்தனை விழுக்காடு என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
சீன, இந்திய வேட்பாளர்கள் எல்லா தொகுதிகளிலும் சேவையாற்றுவது போலவே, எல்லா மக்களுக்கும் சேவை செய்யக் கூடிய மலாய் வேட்பாளர்கள் அடையாளம் காணப்படுவர்கள் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
