
2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை விட 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அதிகமென்றாலும் மக்களுக்கு வழங்கப்படும் உதவிநிதி 1,700 கோடி ரிங்கிட் குறைக்கப்பட்டது ஏற்க முடியாதது என பிகே ஆரின் தகவல் பிரிவுத் தலைவர் பாஹ்மி பாட்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷிய-உக்ரேய்ன் போர் இன்னும் முடிவடையவில்லை என்பதால் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. இந்நிலையில் பெரும்பாலான உணவுப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது, அதிக விலை கொடுக்க வேண்டி வரும். எனவே, வசதி குறைந்த மக்களுக்கு உதவி செய்ய அரசைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
ரிங்கிட்டின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக பெரும் சரிவைக் கண்டு வரும் வேளையில், வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் பொருள்களின் விலை இன்னும் விலையர்வு காணும் என்பதால், கடந்தாண்டு வழங்கப்பட்டது போன்றே உதவிநிதி வழங்க அரசு முன் வரவேண்டுமென ஃபாடில் கேட்டுக் கொண்டார்.
