
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டானது வரும் பொதுத்தேர்தலை மனதில் வைத்தே வரையப்பட்டதாகும். பொதுத்தேர்தல் முடிந்த பின்னர், அது கசப்பாக மாறுவது உறுதி என பாயான் பாரு எம்பியான சிம் ட்ஸெ ட்ஸின் குறிப்பிட்டார்.
பட்ஜெட் காகிதத்தில் பிரமாதமாக ஜோடிக்கப்பட்டுள்ளது ஆனால், நிதியமைச்சர் குறிப்பிட்டதைப் போல எதிர்ப்பார்க்கப்பட்ட வருமானத்தை பெற முடியுமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்தார்.
ரிங்கிட்டின் மதிப்புச் சரிவு, பணவீக்கம், பொருளாதார சரிவு போன்றவற்றால் கணிக்கப்பட்ட வருமானத்தை ஈட்டுவது முடியாத காரியமாகும்.
உலகளவில் விலங்குகளுக்கான உணவு வகைகள் 200 மடங்கு உயர்ந்திருக்கும் வேளையில், குடியானவர்கள், மீனவர்களுக்கான உதவிநிதி 10 கோடி ரிங்கிட் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல என அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட்டை அங்கீகரிப்பதற்கு முன்னதாக நாடாளூ மன்றம் கலைக்கப்பட்டால், பொதுத்தேர்தலுக்குப் பின்னர் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யும் சாத்தியம் உள்ளது.
எனவே, 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடந்தது போன்றே, தேசிய முன்னணி கொடுக்கும் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, பக்காத்தான் கூட்டணிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
