
தம்புன் தொகுதியில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் போட்டியிட்டால் தாம் அவரை எதிர்க்கத் தயாராக இருப்பதாக பெர்சத்துவின் துணைத் தலைவரும் இளைஞர், விளையாட்டு அமைச்சர் அமாட் ஃபைசால் அஸுமு தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் அன்வார் எங்கு வேண்டுமானால் போட்டியிட உரிமை உள்ளதாகவும், உண்மையில் அவர் தமது தொகுதியான தம்புனில் போட்டியிட்டால், தாம் எதற்கும் தயாராகவே இருப்பதாகத் தெரிவித்தார்
இதற்கு முன்னர், பேராக் பிகேஆர் தம்மை தம்புன் தொகுதியில் போட்டியிட அழைப்பு கொடுத்துள்ளதாகவும் தாம் பிகேஆருக்கு துரோகம் இழைத்துச் சென்ற எதிரிகளுக்குப் பாடம் புகட்ட ஆவலாக இருப்பதாகத் அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
