
கோழி வளர்ப்போருக்கும் முட்டை விநியோகிப்பாளர் களுக்குமான அரசின் உதவி நிதி ஆண்டு இறுதி வரை தொடரும் என்று விவசாயம், உணவுத் தொழில்துறை அமைச்சர் Ronald Kiandee (ரோனால்ட் கியாண்டி) தெரிவித்தார்.
கோழி இறைச்சிக்கான உதவி நிதி கிலோவுக்கு 80 சென்னாகவும், முட்டை ஒன்றுக்கு உதவி நிதியாக 8 சென்னும் வழங்கப்படுகிறது.
இந்த முடிவானது வெள்ளிக்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதாகவும் கோழிப் பண்ணையாளர்களின் சுமையைக் குறைக்கவே இந்த முடிவென்றும் அவர் தெரிவித்தார்.
கோழி வளர்ப்பிற்கான தீவணம், கட்டமைப்பு வசதிகள், ஊழியர்களின் சம்பளம், மருந்து போன்ற பொருள்களுக்கான விலை 70 விழுக்காடு அதிகரித்துள்ளதால் கோழியின் விற்பனை விலையை ரிம. 9.40க்கும் முட்டையின் விலை 45 சென், 43 சென், 41 ஆக விலை நிலை நிறுத்தப்படும் என்றும் ரோனால்ட் கியாண்டி தெரிவித்தார்.
