
மலாய்க்காரர்கள் பணத்திற்காக அம்னோவை ஆதரிக்கின்றனர் என துன் மகாதீர் அவர்களைச் சிறுமை படுத்தக் கூடாது என அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி சாடியுள்ளார்.
தற்போது மலாய்க்காரர்கள் மனம் மாறி அம்னோவின் பக்கம் திரும்பி வருவதாகவும், 22 மாத கால பக்காத்தான் ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்ய முடியாது, பொருளாதாரத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கெடுத்த எதிர்க்கட்சிகளை அவர்கள் இனிமேலும் நம்பத் தயாராக இல்லை என குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் மகாதீர் கூறும்போது, அம்னோவிடம் பணம் நிறையவே இருப்பதால், அதனை வாரி இரைத்து மலாய்க்காரர்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெறும் என்று கூறியிருந்தார்.
