29.3 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

மலாக்கா கவர்னர் குறைகூறலுக்கு அப்பாற்பட்டவர் அல்லர்!

🔥 Views : 10
👁 Reading Now : 27

மலாக்கா கவர்னர் Ali Rustam (அலி ருஸ்தாமை) டுவிட்டர் அகப்பக்கத்தில் குறை கூறியிருந்த சிலாங்கூர் மந்திரி பெசார் Amirudin Shari அமிருடின் ஷாரியின் சிறப்புச் செயலாளர் Jay Jay Denis (ஜெய் ஜெய் டெனிஸை) மலாக்கா போலீஸார் கைது செய்திருப்பதை பெர்சே இயக்கம் கடுமையாகச் சாடியுள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதி ஜெய் ஜெய் வெளியிட்டிருந்த டுவிட்டர் செய்தியில், அன்று இரவு 11.30 மணியளவில் தமது குடும்ப விருந்தில் கலந்து கொள்ள வந்த ருஸ்தாம் அலிக்கு 6 மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு வீரர்களும், 3 ரோந்துக் கார்கள் பவனியுடன் வந்ததாகவும், அதன் காரணமாக ஸ்பிரின்ட் நெடுஞ்சாலை யு-டர்னில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதனையொட்டி, அவர் மலாக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், விடுவிக்கப்பட்டார்.
ஜெய் ஜெய்யைக் கைது செய்தது அதிகாரத் துஷ்பிரயோகம் என்றும் கவர்னர்கள் அரசு பணியாளர்கள் என்பதால் அவர்கள் தவறிழைத்தால், பொதுமக்களின் குறைகூறலை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென பெர்சே குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles