
சபா, கூடாட்டில் உள்ள கம்போங் தஞ்சோங் காப்புரில் நேர்ந்த தீ விபத்தில் 20 வீடுகள் அழிந்து, 200 பேர் குடியிருக்க வீடில்லாமல் பரிதவிக்கின்றனர்.
இத்தீ விபத்தில் உயிருடற் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆயினும் 202 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்த எல்லா வீடுகளும் தரை மட்டமாகியுள்ளன.
தீ ஏற்பட்ட காரணம் ஆராயப்பட்டு வருவதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
