33.8 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

தேசிய முன்னணியின் மாநில அரசுகளும் கலைக்கப்படும்

15ஆவது பொதுத்தேர்தலோடு தேசிய முன்னணியின் கீழ் இருக்கும் பெர்லிஸ், பகாங், பேராக் ஆகிய மாநில அரசுகளும் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
எனினும், ஜொகூர், மலாக்கா, சரவாக் மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் தவணை இன்னமும் இருப்பதால், அவற்றின் சட்டமன்றங்களைக் கலைக்க வலியுறுத்தப்படாது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பக்காத்தானின் ஆட்சியில் இருக்கும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்கள் அடுத்தாண்டு கலைக்கப்படும் என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், பாஸ் தனது ஆட்சியின் கீழிருக்கும் கிளந்தான் திரெங்கானு மாநில சட்டமன்றங்களைக் கலைக்கும் எண்ணம் இல்லையென்று தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles