34 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

நாடாளுமன்றம் கலைப்பு நாட்டின் நிலைத் தன்மையையும் சுபிட்சத்தையும் உறுதி செய்யும்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலை நடத்தும் பிரதமர் இஸ்மாயில் சப்ரியின் முடிவை தாம் வரவேற்பதாக அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi (அமாட் ஸாஹிட் ஹமிடி) தெரிவித்தார்.
நிலையான ஆட்சியையும் நாட்டின் வளப்பத்தையும் உறுதிப்படுத்த மக்களின் கட்டளையைப் பெறவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
22 மாதங்களுக்குப் பின்னர் பக்காத்தான் ஆட்சி கலைக்கப்பட்டு, தேசிய முன்னணியின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த Muhyiddin Yassin (முஹிடின் யாசின்) தலைமையிலான பெரிக்காத்தான், எங்களை உதாசீனப்படுத்தி, முதுகில் குத்தியதால் அதற்கான ஆதரவை மீட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலைத்தன்மை இல்லாததால் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் கட்டளையைப் பெறவே தேசிய முன்னணி பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles